முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது வெளியிட்டார்.
அந்த தொகை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ -2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன்
மைத்திரிபால சிறிசேன – 2015 முதல் 2019 வரை 384 மில்லியன்
கோட்டாபய ராஜபக்ஷ – 2020 முதல் 2022 வரை 126 மில்லியன்
ரணில் விக்கிரமசிங்க – 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன்
அநுர குமார திசாநாயக்க – செப்டம்பர் 2024 முதல் பெப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன்