மித்தெனிய முக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அருண விதானகமகே என்பவரும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.