உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் அதற்கான ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என்று ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.
அதன்படி, ஆணைக்குழு அதிகாரிகளும் இன்று கூட உள்ளனர்.