2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் வெறுப்புப்பேச்சு 113 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பாலின அடிப்படையிலான வெறுப்புப்பேச்சு 159 சதவீதம் அதிகரித்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இனம் அல்லது மத ரீதியில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு 8 மடங்கு அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.
அதேநேரம் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் உள்ளூர் அமைப்புகளின் தீவிர முயற்சிகள் மூலம், சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்நிலை பிரசாரங்கள் 2021 ஆம் ஆண்டு முதல் குறைந்தன.
இருப்பினும், மதங்கள் மற்றும் பெண்களை இலக்குவைத்து குறிப்பாக பொது நிகழ்வுகளில் ஈடுபடுபவர்களை அல்லது பொதுவெளியில் கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு எதிரான வெறுப்புப்பேச்சு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.