மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் 1 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.