முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கோட்டாபய ராஜபக்ஷ புத்திசாலி மற்றும் முதிர்ச்சியுள்ளவர் என்றும், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்திருப்பதால் அவருக்கு அந்த பதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றார்.
கடந்த காலங்களில் இந்நாட்டின் அனைத்து விடயங்களிலும் நேரடியான தீர்மானங்களை எடுத்த தலைவர்களாக இருந்த முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு தற்போது உயிர் அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சட்டத்தரணி மனோஜ் கமகே;
“எங்கள் தலைவர்களின் உயிருக்கு நாங்கள் அஞ்சுகிறோம். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவும் பயந்துள்ளார். ஏனென்றால், கடந்த காலத்தில், ராஜபக்சவின் பெயரைக் கூறிக் கொண்டு, இவை அனைத்திற்கும் எதிராகத் துணிச்சலாகவும் நேரடியாகவும் முடிவுகளை எடுத்த தலைவர்கள் அவர்கள்.
இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அரசாங்க அமைச்சர்கள் கூறுவது போல் இந்த நாடு இன்னமும் ராஜபக்சக்களால் ஆளப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்போது அந்த நாற்காலிகளில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, உடனடியாக அந்த நாற்காலிகளை விட்டு வெளியேறுங்கள். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பதவியை கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துவிட்டு அவர் இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார். ஏனெனில், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை சாமர்த்தியமாக நிலைநிறுத்திய ஒரு தலைவர் பாதுகாப்புச் செயலாளராக இருக்கிறார்.
உங்களால் முடியாவிட்டால் சிணுங்காதீர்கள், வெட்கப்படாமல் சென்று கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்றார்.