பொருளாதார ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்தா கூறினாலும், இறுதியாக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி மேசையை தட்டி ரூ.10 இனால் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விலையினை உயர்த்தி வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடைசியில் டட்லி மௌனம் சாதிக்க, விவசாயி கூச்சல் போடும் நிலைக்கு வந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.
பொருளாதாரம் புதிய திசையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினாலும், பொருளாதார திசையில் மாற்றம் ஏற்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுனர் கடந்த தினம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.