வறண்ட வானிலை காரணமாக, சில பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்மலானை, பிலியந்தலை, மொரட்டுவ, பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வறண்ட வானிலையுடன் நீர் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவர் தெரிவித்தார்.