follow the truth

follow the truth

October, 3, 2024
Homeஉள்நாடுஅழைப்பு விடுத்தால் பங்கேற்பு நிச்சயம் : என் இளமை அரசியலைப் பார்த்து பயப்பிடுகிறார்கள் - ஜீவன்...

அழைப்பு விடுத்தால் பங்கேற்பு நிச்சயம் : என் இளமை அரசியலைப் பார்த்து பயப்பிடுகிறார்கள் – ஜீவன் (VIDEO)

Published on

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில்,  தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம்.

சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கின்றோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது.

எமக்கு அழைப்பு விடுக்கப்படும்பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும்கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து...

பொதுத் தேர்தல் – இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 37 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம்...