வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார்.
தற்போது எதிர்கொண்டுள்ள கடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக உள்ள ஒரே வழி ஏற்றுமதியை அதிகரித்தல் மட்டுமல்ல. வெளிநாட்டு அன்னியச் செலவு அணியை உழைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய ஏனைய மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
ஏற்றுமதியாளர்களால் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவசியமான ஒதுக்கீட்டை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்நாட்டு விலை ஸ்த்திரத் தன்மையை அடைதல் மற்றும் அதனை பேணுதல் ஆகிய பொறுப்புக்கள் சட்டபூர்வ நிறுவனமான மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மத்திய வாங்கினால் மேற்கொள்ளப்படும் நிதியியல் கொள்கை நடவடிக்கைகளின் ஊடாகவே நாட்டின் வட்டி வீதங்கள் தொடர்பான அதிகமான தீர்மானங்கள் எடுக்கப்படும். இலங்கை மத்திய வங்கி ஒட்டுமொத்த பொருளாதார செயற்பாடுகளை மீட்டெடுக்கும் நிலையை அடையும் நோக்கில் 2023 ஜூன் மாதத்தில் இருந்து தளர்வான நிதிக் கொள்கைகளைப் பின்பற்றியது. அதன்படி வரலாற்றில் இடம்பெற்ற சாதாரண பொருளாதார நிலைமையை நெருங்கி வருகின்றது.
சந்தையின் வட்டி வீதம் கவனத்தில் கொள்ள வேண்டிய குறைவை வெளிப்படுத்தி சாதாரண நிலைமைக்கு வந்துள்ளது. 2027 இற்குள் பொருளாதார நூற்றுக்கு ஐந்து வீதம் அளவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை வட்டி வீதம் குறைவடைவதனால் நிலையான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு விசேடமாக வட்டி வருமானத்தை எதிர்பார்த்திருக்கும் மக்களையும் பாதிக்கின்றது. இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டின் வட்டி வீதம் பொருளாதாரக் காரணிகள் பலவற்றின் கூட்டினால் தீர்மானிக்கப்படும்.
இந்த பொருளாதாரக் காரணிகளுக்குள் சர்வதேச அரசாங்கங்களின் முதலீடுகளினால் நாட்டிற்கு அபாயகரமான அதிக விலை நிதிக் கொள்கை, அரச நிதிக் கொள்கை, சந்தை நிலமைகள், நாட்டின் கடன் தரப்படுத்தல், உலகளாவிய வட்டி விகிதாசாரப் போக்குகள், மற்றும் மூலதன பாய்ச்சல் போன்ற வழ வாரியான காரணிகள் இதில் உள்ளடங்கும்.
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் ஏற்படும் தாமதம் தொடர்பான சிக்கல்களுக்கு முறையானதாக அரசாங்கத்தினால் பின்வரும் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறுங்கால நடவடிக்கையாக வாரத்தில் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் பண்டங்களை பகுப்பாய்வு செய்யும் செயற்பாடு மேற்கொள்ளப்படுதல் மற்றும் சுங்க அதிகாரிகள் மற்றும் பொருட்கள் அனுமதி செயன்முறையுடன் தொடர்புடைய பிற அரச நிறுவனங்களும் நடைமுறைப்படுத்துகின்றன
அனுமதி செயல்முறை மேற்கொள்ள வேண்டிய கொள்கலன்களை வைத்துக் கொள்வதற்காக பேலியகொடையில் அமைந்துள்ள ஏசியன் கொள்கலன் களஞ்சிய சாலையில் காணப்படும் இட வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுங்க அனுமதி வழங்குவதை விரைவுப் படுத்துவதற்காக சகல தரப்பினருடனான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெளியக சோதனைகளை மேற்கொள்வதற்கு அவசியமான கொள்கலன்களை குறைப்பதற்காக சுங்கத்தின் கவனம் முகாமைத்துவ கட்டமைப்பின் செயற்திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இடைக்காட செயல்பாடாக அவசியமான அனுமதிகளை பெற்ற பின்னர் அவற்றை விடுவிப்பதற்கு காணப்படும் கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் லொறிகளை நிறுத்தி வைப்பதற்காக துறைமுகத்தில் வெளியேறும் வழியின் அருகில் காணப்படும் ப்ளூ மெண்டல் பிரதேசத்தில் காணி ஒன்றை ஒதுக்குதல் மற்றும் ஏனைய அரசன் நிறுவனங்களின் அனுமதி வழங்கப்பட வேண்டிய கொள்கலன்களை வைப்பதற்காக மேலதிக காணியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெளிவுபடுத்தினார்.