follow the truth

follow the truth

February, 24, 2025
HomeTOP1எஞ்சிய அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை

எஞ்சிய அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை

Published on

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.

உரிய அச்சு இயந்திரங்களைப் பெற்ற பிறகு யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவது இரட்டிப்பாக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் இல்லை

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார்...

வறண்ட காலநிலை – மின் கட்டணம் திருத்தப்படுமா?

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் – நாளையும் தொடரும்

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை...