follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP2அமைச்சர் நளின், SJB எம்பிக்கு தெரிவித்த கருத்துக்கு எதிராக NPP எம்பி எதிர்ப்பு

அமைச்சர் நளின், SJB எம்பிக்கு தெரிவித்த கருத்துக்கு எதிராக NPP எம்பி எதிர்ப்பு

Published on

பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு தெரிவித்த கருத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.

அவர் தனது முகநூல் கணக்கில் இது குறித்த ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் அப்போது அவையில் இல்லாவிட்டாலும், பெண்ணியக் கொள்கைகளுக்காக நிற்கும் ஒரு பெண்ணாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் பொருத்தமற்ற அறிக்கையை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவை குறிவைத்து ஒரு பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“தம்புத்தேகமவுக்கு பணம் செலவழித்ததாக தெரிவித்த அந்த எம்.பி. ரோஹிணி கவிரத்ன. நேற்று முன்தினம் செய்தித்தாளில் அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ரோஹிணி கவிரத்ன என்ற நான், இன்று முதல் ரோஹிணி லமாரத்ன என்று அழைக்கப்படுவேன் என்று இலங்கையில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். லமாரத்ன சொன்ன ஒரு கதையை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இலங்கையில் உள்ள நிலையங்களுக்கு ஒரு சிறிய தொகையும், தம்புத்தேகமவிற்கு ஒரு பெரிய தொகையும்… எனவே லமாரத்னாக்களுக்கு இது புரியவில்லை…”

பிரதி அமைச்சர் நளின் ஹேவகேவின் இந்தக் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

“அவர் இதைச் சொன்னது பொறுப்புடனா அல்லது வேறு ஏதாவது எதிர்பார்ப்புடன்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தனது பெயரை ரோஹிணி லமாரத்ன என்று எனக்குத் தெரிந்தமட்டில் மாற்றிக் கொள்ளவில்லை.., நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தனது பெயரை மாற்றவில்லை. அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டார் என்று கூற அவருக்கு எந்த உரிமையும் இல்லை…”

இருப்பினும், அப்போது அவைத் தலைவராக இருந்த எம்.பி., அந்த அறிக்கையை ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்க வேண்டியிருந்தால், அது குறித்து சபாநாயகருடன் கலந்துரையாடி அது தொடர்பாக ஒரு முடிவை எடுப்பேன் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் பின்னர் எழுந்து நின்ற அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஹன்சாட் அறிக்கையிலிருந்து அந்த அறிக்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானவை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம்,...

பிள்ளையானுக்காக நாமல் முதலைக்கண்ணீர் வடிக்க காரணம் இருக்கு – அமைச்சர் நளிந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம்...

அரசு ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...