follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம்

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம்

Published on

அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, இந்திய அமலாக்கத் துறை 3.44 ரூபா கோடி அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விதிமீறல் காலக்கட்டத்தில் பிபிசியின் ஒளிபரப்புகளை மேற்பார்வையிட்ட அதன் மூன்று இயக்குநர்களுக்கும் தலா ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனத்தின் மீது அந்நிய நேரடி முதலீடு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனது விசாரணையை கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய இரண்டு மாதங்களுக்கு பின்பு அமலாக்கத் துறையின் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்நிய நேரடி முதலீடு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிமீறலுக்காக பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை அபராதம் விதித்துள்ளது. அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.3,44,48,850 ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம்...

டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானவை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம்,...