மித்தெனிய முக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவரையும் 72 மணி நேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (22) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது , நீதவான் இந்த அனுமதியை வழங்கினார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.