follow the truth

follow the truth

February, 22, 2025
Homeஉள்நாடுகாஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும், நிறுவனங்களையும் ACJU பாராட்டு

காஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும், நிறுவனங்களையும் ACJU பாராட்டு

Published on

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத இந்த மும்மொழிவானது பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதுடன் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் நீதிக்கோட்பாடு, சுய நிர்ணய உரிமை என்பவற்றை புறக்கணிப்பதாகவும் உள்ளது.

காஸா மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடானது நீதி, சமாதானம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் அரசுரிமைக்கான நியாயமான அபிலாஷைகளை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தினை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வுடன் துன்பங்களை அனுபவித்த காஸா மற்றும் பலஸ்தீன மக்களுடன் நாங்களும் இணைந்து நிற்கிறோம். முன்மொழியப்பட்ட இடமாற்றத் திட்டம் அநீதியானது மட்டுமன்றி பிராந்தியத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.

பலஸ்தீன மக்களின் நிலம், வீடுகள் மற்றும் இறையாண்மைக்கான உரிமைகள் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்கள், நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் சுதந்திரம், கௌரவம் மற்றும் மாநில உரிமைகளைப் பெற தங்களது ஆதரவை தீவிரப்படுத்துமாறு உலகளாவிய தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனச்சாட்சி உள்ள அனைத்து நாடுகளையும் நாங்கள் அழைக்கிறோம்.

பலஸ்தீன மக்களுக்கு அல்லாஹு தஆலா வலிமைகளையும், பொறுமையையும், வெற்றியையும் வழங்குவானாக. அப்பகுதியில் நீதியும் நிரந்தர அமைதியும் நிலவட்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது

இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச்...

15 பயங்கரவாத அமைப்புக்கள் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட...

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய்...