follow the truth

follow the truth

February, 22, 2025
HomeTOP1இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

Published on

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் அதிக குற்றங்கள் நிகழும் மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவத்துள்ளார்.

நாட்டில் 57 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களும், அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட விசாரணைகளில், 13, T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள், 75, 12-போர் துப்பாக்கிகள், 7 ரிப்பீட்டர்கள், 805 உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் பிற துப்பாக்கிகள் நான்கும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது

இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச்...

15 பயங்கரவாத அமைப்புக்கள் தடை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட...

அர்ஜுன் அலோசியஸ் விடுதலை

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய்...