நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காலநிலை மாற்றம் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை இன்று(22) மீண்டும் தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது.