ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் (Trinh Thi Tam) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் முதலீட்டு ஊக்குவிப்பிலும் இலங்கையுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
அத்தோடு நாடென்ற வகையில் வியட்நாம் அடைந்துள்ள வெற்றிகளை இலங்கையில் திறம்பட பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.