தோற்றத்தில் அல்ல, வாழ்க்கையில் அழகாக இருங்கள் என்ற தொனியின் கீழ் உங்கள் காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், விரைவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு இலங்கை பொலிசார் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
உங்கள் சொந்த நலனுக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் காவல்துறையை ஆதரிக்குமாரும் இலங்கை பொலிஸ் திணைக்கள முகநூல் பக்கத்தில் இது குறித்த பதிவொன்றினை இட்டு தெரிவித்துள்ளது.