follow the truth

follow the truth

February, 22, 2025
HomeTOP2டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடிப்பு - பயங்கரவாத தாக்குதலென சந்தேகம்

டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடிப்பு – பயங்கரவாத தாக்குதலென சந்தேகம்

Published on

இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் மூன்று பேருந்துகள் வெடித்தமை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகும் என இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு அமைய வன்முறை தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Isreal Katz) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹமாஸின் வான்வழித்தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் நால்வரின் உடல்கள் நேற்று இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கொல்லப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் நால்வரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுக மேற்கு முனைய செயற்பாடுகள் பெப்ரவரி 26 ஆரம்பம்

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள்...

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட்...

மாலைதீவு பிரஜைகளுக்கான விசா நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடல்

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று(20) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைத்தீவுக்கும்...