கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல்) காரணமாக கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், உடல்நிலை மோசமாக இருந்த இரண்டு மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெப்பம் அதிகமாக இருக்கும் ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக, பொருத்தமான நேரத்தை நிர்ணயிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிக வெப்பநிலைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நீரிழப்பு கூட ஏற்படலாம் என்றும், கடுமையான நோய் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.