நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்திற்குக் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.