2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 184,926 நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் கேள்விக்கு பதிலளித்த நளிந்த ஜெயதிஸ்ஸ, கம்பஹா மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சிகிச்சைக்கான தடுப்பூசிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 850 மில்லியன் முதல் ஒரு பில்லியன் வரை செலவிடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.