மூர்ஸ் மற்றும் எஸ்எஸ்சி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இன்டர்-கிளப் மூன்று நாள் கிரிக்கெட் போட்டியின் போது, சர்வதேச லீக் கிரிக்கெட் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக துபாய்க்குச் சென்றதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷானகவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 10,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.
இது இந்நாட்டு பணத்தில் சுமார் 3 மில்லியன் ஆகும்.
கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற உள்நாட்டுப் போட்டியின் போது காயம் அடைந்த போதிலும், வெளிநாட்டு லீக் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தசுன் ஷானக மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துவது குறித்தும் இலங்கை கிரிக்கெட் கவனம் செலுத்தியிருந்தது.