உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த முறை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையினால் தேநீர், பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையை அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
உப்பு, தேங்காய், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிற்துறை வெகுவாக பாதிப்படைவதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.