அண்மையில் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கட்சியால் தனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்திருந்தார்.
கடந்த 16 ஆம் திகதி கெசல்வத்த, கிம்பதவில் நடைபெற்ற ‘தூய்மையான இலங்கை’ (Clean SriLanka) நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
“மன்னிக்கவும், ஊடகங்களுக்குப் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், நான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் கூறியிருந்தார்.