ஏற்கனவே பொருட்களின் விலை அதிகமாக உள்ள போதிலும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவை மேலும் அதிகரிக்கும் என்றும் ‘புத்திசாலித்தனமான குடிமக்கள்’ இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
‘தொற்றுநோய் முடியும்; வரை இதுபோன்ற சிரமங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அறிவார்ந்த குடிமக்களாகிய நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவை நாம் விரும்பி செய்யும் செயல்கள் அல்ல. எரிபொருளின் விலையை யார் விருப்பத்துடன் உயர்த்தினால் அது சமூகத்தின் அனைத்து தரப்பையும் பாதிக்கும்’ என அமைச்சர் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு செயல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு நிலவரத்தை அரசாங்கம் சாதுரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.