ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று(17) தீர்மானித்திருந்தன.