அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார்.
இந்த வரவு செலவுத் திட்டம் ‘ரட்ட அனுரட்ட அல்ல, ரட்ட ஐஎம்எப் இற்கு’ என்பதைக் காட்டுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
நேற்று(17) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பிற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டாலும், 3 வருட காலத்திற்கு சம்பள உயர்வு இறுதியில் ஒரு அற்பமான தொகையாகவே இருக்கும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.