follow the truth

follow the truth

March, 12, 2025
HomeTOP2சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Published on

2024 நவம்பர் மாதம் அம்பலாங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சந்தேக நபர் காலி, படபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் “வெல்லகே சமத்” என்பவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பொலிஸார் சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் – 071 8591484

எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு – 091 2291095

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரதமர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி வணிகமான 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம்...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளதுடன்,...

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை...