follow the truth

follow the truth

February, 20, 2025
HomeTOP2டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

Published on

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், “உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது,” என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது “தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்” என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.

டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடும் வெப்பம் – விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி - கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில்...

2024 ஆம் ஆண்டில் 180,000 நாய் கடி சம்பவங்கள் பதிவு – அதிகமானோர் கம்பஹாவில்

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 184,926 நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்...

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பிற்காக 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள்

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு...