follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉலகம்கூகுள் மீது சட்ட நடவடிக்கை - எச்சரிக்கை விடுத்த மெக்சிகோ ஜனாதிபதி

கூகுள் மீது சட்ட நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த மெக்சிகோ ஜனாதிபதி

Published on

”மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன், மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றம் செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.

மெக்சிகோ வளைகுடா பெயர் மாற்றம் குறித்து டிரம்ப் அறிவித்த சில நாள்களிலேயே கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றியது.

இருப்பினும், இந்த பெயர் மாற்றமானது கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மெக்சிகோ வளைகுடாவில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா என்றும், அமெரிக்காவில் அமெரிக்க வளைகுடா என்றும், இதர நாட்டில் கூகுள் மேப் செயலியில் மெக்சிகோ வளைகுடா (அமெரிக்க வளைகுடா) என்றும் கூகுள் நிறுவனம் பெயர் மாற்றம் செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில்,...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம்

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. உலகின் முதல் 10ஜி இணைய...