வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் உறவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாரவில பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (14) காலை கொஸ்வத்த, ஹால்தடுவன பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த மோட்டார் வாகனம், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார்.
அதன்படி, நேற்று விபத்து நடந்த போது வாகனத்தின் சாரதியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரின் உறவினரை கொஸ்வத்த பொலிசார் கைது செய்தனர்.