follow the truth

follow the truth

April, 2, 2025
Homeவிளையாட்டுஇலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு ஒரு வருட போட்டித் தடை

இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு ஒரு வருட போட்டித் தடை

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது சுகாதார நடைமுறைகளை மீறி இரவு வேளையில் நடமாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கே இந்த போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட, குறித்த மூன்று வீரர்களுக்கும் 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா...

சுரேஷ் ரெய்னா சாதனையை முறியடித்த தோனி

ஐ.பி.எல் தொடரின் 8-வது தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல்...

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி விதிப்பது குறித்து தர்மசேனவின் நிலைப்பாடு

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்தச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும்...