ராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்தார்.
தீ விபத்தால், எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்பட்டது.
மலைத்தொடரில் உள்ள பாறைகள் தற்போது வெளிப்பட்டுள்ளதால், பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதாக உதய குமார மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக, எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.