சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ (Miyon Lee) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு கொரிய அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் பங்களிப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொரிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் பங்களிப்புகளை கையாள்வது மிகவும் எளிதானது மற்றும் திறமையானது என்றும் நாட்டின் சுகாதாரத் துறை உற்பத்திகளை அதிகரிக்க முடியும் முடியும் என்றும் எதிர்காலத்தில் முன்மொழியப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போது தேவைப்படும் மருத்துவ உபகரணங்களைப் பெறுவதில் கொரிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை ஆதரவை எதிர்பார்க்கிறது என்றும் நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள ஒரு குறைபாடான மருந்து தர கண்காணிப்பு ஆய்வகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
நாட்டின் ஊடகத் துறையின் வளர்ச்சிக்கு கொரிய அரசாங்கத்திடம் தொழில்நுட்ப ஆதரவையும் அமைச்சர் நாடினார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் வேண்டுகோளுக்கு சாதகமாக பதிலளித்த இலங்கைக்கான கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) நாட்டின் சுகாதாரத் துறைக்கு கொரிய அரசாங்கம் எதிர்காலத்தில் பங்களிப்பு வழங்கும் என தெரிவித்தார்.
கொரிய அரசாங்கத்தின் KOFIH இன் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட இலங்கையின் மருத்துவ பொறியியல் சேவைகளை மேம்படுத்தும் திட்டம் உட்பட சுகாதாரத் துறையில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து அவர் அமைச்சருக்கு விளக்கினார்.
KOICA பல்வேறு துறைகளில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குகிறது அதே நேரத்தில் KOFIH என்பது சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
நாட்டின் ஊடகத் துறையின் முன்னேற்றத்திற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.