அஸ்வெசும குடும்பத்திற்குள் உள்ள 70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
தேவைப்படும் குடும்பங்களில் உள்ள பெரியவர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெற்று வரும் பெரியவர்களுக்கு மட்டுமே தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.