இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் திகதி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விட்யங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் மோதி தெரிவித்தார்.
உலகில் மிக அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா எங்களுக்கு உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பிரதமர் மோதி முன்னிலையில் தெரிவித்தார்.
வரி விதிப்பில் அவர்கள் கடுமையாக இருந்துள்ளனர். அவர்களை குறை கூற வேண்டியதில்லை. வணிகம் செய்வதற்கான ஒரு வித்தியாசமான வழி அது.” என பேசினார்.
அமெரிக்காவிடமிருந்து கூடுதலாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தத்தையும் இந்த சந்திப்பின்போது டிரம்ப் அறிவித்தார்.
தங்களின் வர்த்தக கூட்டாளிகள் தங்கள் மீது எந்தளவுக்கு இறக்குமதி வரிகளை விதிக்கிறதோ அதே அளவு வரியை அந்த நாடுகளும் எதிர்கொள்ளும் என, டிரம்ப் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில் மோதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.