NPP பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இந்திக நஜித் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட போதே இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
NPP பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இந்திக நஜித்
கருத்துத் தெரிவிக்கையில்…
“யுத்தத்துக்கு பின்னர் இவர்கள் இருந்த அரசாங்கம்தான் இனவாதத்தை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு இல்லாத பிரச்சினைகளை உருவாக்கினார்கள்.
சிங்கள முஸ்லிம் மக்களுக்கிடையில் விரோதமான மனநிலையை உருவாக்கினார்கள்.
மலட்டு சத்திரசிகிச்சை பற்றி , மலட்டுக் கொத்து பற்றி, மலட்டு உள்ளாடைகள் குறித்து, இப்படி இல்லாதவைகளை சொன்னார்கள்.
நான் ஒரு வைத்தியர், எனக்குத் தெரியும் அது எல்லாம் பொய் என்று”
இடையில் குறுக்கிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
” மலட்டு சத்திரசிகிச்சை பற்றி , மலட்டுக் கொத்து பற்றி, மலட்டு உள்ளாடைகள் குறித்து உதய கம்மன்பில சொன்ன சாட்சிகள் உங்களிடம் இருக்கிறதா?”
நான் ஒன்றை உங்களுக்கு போட்டுக்காட்டவா?
ஹா போடுங்கள் பார்ப்போம்.
இவர்கள் எவ்வாறு அரசியல் செய்தார்கள் என்று இவர்களுக்கே நினைவில் இல்லை. 32 செக்கன் வீடியோ இருக்கிறது.
அதன் பின்னர் உதய கம்மன்பில பேசிய வீடியோவை பாராளுமன்ற உறுப்பினர் போட்டுக்காட்டினார். அந்த வீடியோ இணைப்பு கீழே உள்ளது.