இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெறுகிறது.
அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 101 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதற்கமைய, போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.