கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வாதுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் நேற்று(12) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளும் இன்று (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்காக குறித்த நான்கு பேரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.