follow the truth

follow the truth

February, 13, 2025
HomeTOP2எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

எதிர்காலத் செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

Published on

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

மாகாண மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25%ஆக வரும் வகையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் தேர்தலில் அந்த முன்மொழிவை செயற்படுத்தும் வகையில் தற்பொழுது காணப்படும் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அவசியம் தொடர்பில் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் தீர்மானித்தது.

பணியிடங்களில் பாலியல் வன்முறையை ஒழித்தல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை (SGBV) இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மார்ச் 8ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் திட்டங்கள் தொடர்பிலும் ஒன்றியத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 வரவு செலவுத்திட்ட இறுதி கட்டம் தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத்...

வாதுவ பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு பிணை

கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

ஹொரணை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

ஹொரணை, பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இன்று (13) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. கறுவாப்பட்டை சார்ந்த வாசனை திரவியங்களை உற்பத்தி...