அஸ்வெசும பயனாளிகளின் 2025 பெப்ரவரி மாதத்திற்கான தொகை இன்று வங்கிகளுக்கு வைப்பிலிடப்படும் என நலத்திட்ட உதவிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 1.7 மில்லியனுக்கும் அதிகமான பயனாளி குடும்பங்களுக்கு நிவாரணப் பங்களிப்புகளாக ரூ. 12.5 பில்லியன் இன்று வங்கிகளில் வைப்புச் செய்யப்பட உள்ளது.
பயனாளிகள் இன்று முதல் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் இந்தப் பணத்தைப் பெறலாம் என்று குறித்த வாரியம் தெரிவித்துள்ளது.