AI தொழிநுட்ப நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனமாக தற்போதைக்கு கருதப்படும் நிறுவனம்தான் OpenAI நிறுவனம். இது chatgpt நிறுவனத்தின் கீழ் வருகின்ற நிறுவனமாகும்.
இந்த OpenAI நிறுவனத்தை 97.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி தன்னால் வாங்க முடியும் என்றும் அதனை பகிரங்கமாக அறிவிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கமானவரும் உலக பணக்காரர்களில் முன்னணியில் திகள்பவருமான இலோன் மஸ்க் அறிவித்தார்.
ஆனால் தங்கள் நிறுவனம் விற்பனைக்கு இல்லை என்றும் தங்கள் நிறுவனத்தை முன்னேற்ற தாங்கள் பாடுபட்டு வருவதாககவும் chatgpt நிறுவனத்தின் உரிமையாளர் அல்ட்மன் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடந்த AI தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இது டெஸ்லா நிறுவன தலைவரும் ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கமானவருமான இலோன் மஸ்க்க்கு பெரும் அவமானம் என்று தொழிநுட்பவியலாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.