இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி 12 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி பெப்ரவரி 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இரண்டு போட்டிகளும் பகல் நேர போட்டிகளாக நடைபெறவுள்ள நிலையில், இரண்டு போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
16 பேர் கொண்ட இலங்கை அணி விபரம் பின்வருமாறு,
சரித் அசலங்க – தலைவர்
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஷ்க பெர்னாண்டோ
குசல் மெந்திஸ்
கமிந்து மெந்திஸ்
ஜனித் லியனகே
நிஷான் மதுஷ்க
நுவனிந்து பெர்னாண்டோ
துனித் வெல்லாலகே
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வெண்டர்சே
அசித பெர்னாண்டோ
லஹிரு குமார
மொஹமட் ஷிராஸ்
எஷான் மாலிங்க