follow the truth

follow the truth

February, 11, 2025
HomeTOP2340,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பாரப்பு

340,000 இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பாரப்பு

Published on

2025 ஆம் ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தௌிவூட்டுவதற்காக தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக டி.டி.பி. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டளவில், 75 சதவீத தொழிலாளர்களை தொழில்முறை வேலைகளுக்கும், 25 சதவீத தொழிலாளர்களை குறைந்தபட்ச தொழில்முறை வேலைகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணியகம் ஊடாக நேரடியாக அனுப்பப்படும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்காக 15,900 பேரையும், ஜப்பான் வேலைவாய்ப்புக்காக 9,000 பேரையும் தென் கொரியாவிற்கு 8000 பேரையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கங்காராம நவம் மஹா பெரஹெர – இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர காரணமாக இன்று(11) மற்றும் நாளை(12) இரவு...

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்கு பலம் வாய்ந்த தரவு முறைமை அவசியம்

வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும்...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

கொட்டாஞ்சேனை புனித பெனடிக் பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ்...