முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டின் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியைப் பார்வையிட்ட பின்னர், வழக்கைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து பொலிஸ் தீர்மானிக்க முடியும் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.