பாகிஸ்தானில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் சமூக ஊடக தளமான யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சுமார் 80 வீடு கொண்ட இந்த கிராமம் பாகிஸ்தானின் மற்ற கிராமங்களை போல் வாழ்க்கை முறையை நடத்தினாலும் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் உள்ளார்கள்.
ஒவ்வொரு யூடியூபருக்கும் சுமார் மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் இருக்கின்றனர். இதுவே இந்த குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மேலும் யூடியூபில் வீடியோக்கள் பதிவிடுவதன் மூலம் அவர்கள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த கிராமத்தில் உள்ள ஒருவர் இது குறித்து கூறுகையில், `தான் ஆண்டு முழுவதும் சம்பாதித்த பணத்தை YouTube மூலம் ஒரே நாளில் சம்பாதிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இவர்கள் பக்தி, கருணை தொடர்பான வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் YouTube இல் சம்பாதிப்பதற்காவே ஊர் திரும்பி உள்ளனர்.
கிராமவாசிகள் சிலர் இதற்கான ஐடியாக்களை பகிர்ந்ததை தொடர்ந்து துபாயில் இருந்து மீண்டும் பாகிஸ்தானிற்கு வந்து YouTube மூலம் சம்பாதித்து வருகின்றனர்.