2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்த நேரத்தில், இந்த முறைப்பாட்டில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.