லெபனானில் உள்ள சுரங்கப் பாதை ஒன்றின் மீது நள்ளிரவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை இணைக்கும் இந்த சுரங்கத்தினூடாக ஹிஸ்புல்லா அமைப்பு ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.
நேற்றிரவு இஸ்ரேலின் விமானப் படையின் போர் விமானங்கள் லெபனானின் பெகா பகுதியில் அமைந்த சுரங்கப் பாதை மீதே வான்வழித் தாக்குதலை நடத்தியது.
கடந்த நாட்களிலும் இந்த சுரங்கப் பாதை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வழிகளை மேற்கொள்வோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தமுள்ள சூழலில், இதனை மீறும் வகையில் இந்த தாக்குதல் அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.